கர்நாடகா காங். தலைவர் சிவகுமாருக்கு கொரோனா

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக காய்ச்சல், இருமலால் அவர் அவதிப்பட்டு வந்தார். இதனால், கொரோனா பரிசோதனை  செய்தார். அதில், அவருக்கு கொரோனா தொற்று  உறுதியானது. அவர் உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர்கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories:

>