தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு: 29ஆம் தேதி முதல்வர் தலைமையில் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த சூழலில் வரும் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி மூலம் நடைபெற உள்ள ஆலோசனையில் செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் தினமும் சுமார் 6 ஆயிரம் பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தொற்றை குறைக்கும் நோக்கில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29-ம் தேதி மாலை ஆலோசனை நடத்தவுள்ளார். ஊரடங்கு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் 29-ம் தேதி காலை முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேசுவதாக தகவல் தெரிவிக்கின்றனர். மத்திய அரசு இ-பாஸ் தேவையில்லை என்று அறிவித்துள்ள நிலையில் இ-பாஸ் ரத்து செய்வது பற்றியும் ஆலோசனை நடைபெற உள்ளது. வரும் 31-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு முடிய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories:

>