×

கர்நாடகாவில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு : உரிய நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்

கர்நாடகா:  கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது. ஆகஸ்ட் 2வது வாரத்தில் பெய்த கனமழையால் வட கர்நாடக மாநிலத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வட நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்தது. இதேபோல் பலத்த கனமழையின் காரணமாக ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் பெலகாவில் சுமார் 74 கிரமங்களுக்கு ஹை அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் விவசாய நிலங்கள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி நாசமடைந்தன. தொடர்ந்து குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவு பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விமானம் மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எடியூரப்பாவுக்கு எதிராக விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உரிய நிவாரணம் வழங்கக்கோரி அவர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர். மேலும் கர்நாடகாவில் புதிதாக கொண்டுவரப்பட்ட நிலசீர்திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.



Tags : visit ,Eduyurappa ,Karnataka: Farmers ,Karnataka , Farmers protest , Eduyurappa's visit ,visit flood-hit Karnataka
× RELATED பாஜக ஆட்சியில் 140 கோடி இந்தியர்களும்...