×

அமெரிக்காவில் கறுப்பினத்தவரின் முதுகில் போலீசார் சரமாரியாக சுட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலவரம்

நியூயார்க்: அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் கருப்பினத்தைச் சேர்ந்தவரின் முதுகில் போலீஸ் சரமாரியாக சுட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. கெனாஷா நகரில் நேற்று உள்ளூர் பிரச்சனை தொடர்பாக ஜக்கப் பிளேக் என்ற கருப்பினத்தவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். தனது குழந்தைகள் உள்ள காரை திறந்து உள்ளே செல்ல முயன்ற பிளேக்கின் முதுகில் போலீசார் 7 முறை சுட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிளேக், ஒரு கறுப்பின மனிதர், ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு எஸ்யூவியின் ஓட்டுநரின் பக்கவாட்டுக்குள் நுழைய முயன்றபோது பல முறை சுடப்பட்டார். வாகனத்தில் அவரது 3, 5, மற்றும் 8 வயது குழந்தைகள் இருந்தனர். துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, காயமடைந்த நபர் மில்வாக்கியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் அதிகாரிகள் உதவி செய்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர் திங்கள்கிழமை பிற்பகுதியில் தீவிர சிகிச்சையில் இருந்தார் என்று அவரது வழக்கறிஞர் கூறினார். துப்பாக்கிச் சூட்டின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய பின்னர் கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக்களில் கூடினர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசை கண்டித்தும், நிறவெறிக்கு எதிராகவும் நடந்த போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் பல அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. கருப்பினத்தவர் சுடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கலவரம் காரணமாக கெனாஷா நகரில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

 



Tags : police firing ,black man ,United States ,shooting , America, shooting, rioting
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்