×

ஜம்மு நீதிமன்றத்தில் புல்வாமா தாக்குதல் தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்கிறது என்.ஐ.ஏ

ஜம்மு காஷ்மீர்:  இந்திய வரலாற்றில் மறக்க இயலாத நிகழ்வாக மாறிய புல்வாமா தாக்குதல் தொடர்பாக ஜம்மு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லெட்போரா என்ற இடத்தில் 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. மிக அதிக இராணுவ பாதுகாப்பு கொண்ட ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பல்வேறு கேள்விகள் இன்றளவும் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. மேலும் இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளான முடாசிர், அகமது கான், சஜித் பாத் ஆகியோர் கொல்லப்பட்டதால் என்.ஐ.ஏ இன்னும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. ஏனெனில் அதிக பாதுகாப்புள்ள துணை இராணுவ வாகன அணிவகுப்பின்போது, பயங்கரவாதிகள் நுழைந்தது எப்படி? என்பது குறித்தும், சக்திவாய்ந்த வெடிபொருட்கள் அதிகளவில் எவ்வாறு? கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் இதுவரை ஏதும் தகவல் இல்லை. மேலும் இந்த தாக்குதல் இந்திய உளவுத்துறையின் தோல்வியா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடைதெரியாத நிலையில், இன்று குற்றப்பத்திரிகையை ஜம்மு- காஷ்மீர் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ தாக்கல் செய்ய உள்ளது.
Tags : NIA ,Jammu ,Pulwama ,attack ,court , NIA files chargesheet in Pulwama attack in Jammu court
× RELATED கேரள தங்கக் கடத்தல் வழக்கில் 3 பேரை...