×

சென்னை மாணவி கடத்தலில் மதபோதகர் ஜாகீர் நாயக்கிற்கு தொடர்பு - என்.ஐ.ஏ தீவிர விசாரணை

சென்னை:  சென்னை மாணவி லண்டனில் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டது குறித்து இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கருடன் தொடர்புடைய பங்களாதேஷ் கும்பல் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்து வருகிறது. கடந்த மே மாதம் 28ம் தேதி சென்னையை சேர்ந்த மாணவி லண்டனில் காணாமல் போனதாக அவரது தந்தை புகாரளித்திருந்தார். இதுகுறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு காவல் துறை, மாணவி கடத்தப்பட்டதில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாணவி கடத்தல் வழக்கு ஜூலை 11ம் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் வங்கதேசத்தை சேர்ந்த அரசியல்வாதியின் மகன் நஃபீஸ் மாணவியை கடத்தியதும், அவரை மிரட்டி மதமாற்றிருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியிருக்கிறது. இதனையடுத்து நஃபீஸுடன் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கிற்கும் தொடர்பிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பின்னர் மாணவி கடத்தலில் மதபோதகர் ஜாகீர் நாயக்கிற்கு உள்ள தொடர்புகள் குறித்து அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதாவது சென்னை மாணவியின் குடும்பத்திடமிருந்து பணத்தினை பறிக்க கடத்தல் நடைபெற்றதா? , அல்லது பாலியல் தொழில் செய்வதற்கு மாணவி கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை மாணவி கடத்தலில் தொடர்புடைய நஃபீசை இந்தியா அழைத்துவந்து விசாரணை செய்யவும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

Tags : NIA ,student abduction ,Chennai , NIA intensifies probe into Chennai student abduction
× RELATED கேரள தங்கக் கடத்தல் வழக்கில் 3 பேரை...