×

விருதுநகரில் பார்வையற்றவர்களுக்கு ஒதுக்கிய நிதியில் முறைகேடு?: கருப்புக்கொடியோடு போராட வந்தவர்களால் பெரும் பரபரப்பு

விருதுநகர்:  விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பார்வையற்றவர் 15 பேர் பட்டினி போராட்டம் நடத்த போவதாக கருப்பு கொடியேந்தி மனு  அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பார்வையற்றவர்கள் வேதமுத்து தலைமையில் மனு அளித்து கூறுகையில், கொரோனா தொற்று பரவல் ஊரடங்கால் பார்வையற்றவர்கள் வீடுகளை  விட்டு வெளியே செல்ல முடியாத நிலை இருந்தது. இவர்களுக்கு உணவு பொருள் வழங்குவதற்கு  மாவட்டத்திற்கு ரூ.10லட்சம் நிதி அரசு  ஒதுக்கியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பார்வையற்றவர்களுக்கு உணவு பொருள் நிவாரணம் எதுவும் வழங்கவில்லை. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல  அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டும் உணவு பொருட்கள் வழங்கவில்லை.

 நூறு பார்வையற்றவர்களுக்கு வழங்க வேண்டிய உணவு பொருட்களை வழங்கும் வரை பட்டினி போராட்டம் நடத்த போவதாக அவர்கள்  தெரிவித்தனர்.இதுகுறித்து  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி கூறுகையில்,`` மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு பொருள் வழங்க ரூ.6 லட்சம்  நிதி வந்தது. 45 பார்வையற்றவர்கள் உட்பட 545 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கினோம். நூறு பேர் இருப்பதாக கூறி, மேலும் 55 பேருக்கு  தேவையென கோரினர். விருதுநகர் தாசில்தார் மூலம் 55 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கப்படும்’’ என அவர் தெரிவித்தார்.


Tags : award city ,award city Misappropriation , visually, award city,allocated , fight,flag
× RELATED 3,400 மாணவர்கள் பதாகைகள் ஏந்தியபடி 5 நிமிடம் ஒரே இடத்தில் நின்று சாதனை