×

பெரம்பலூரில் பலத்த மழை பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் வீடுகளில் புகுந்தது: துர்நாற்றத்தால் மக்கள் அவதி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி 7 மணிமுதல் மாவட்டத்தின் பல இடங்களில்  பரவலாக கன மழை பெய்யத் தொடங்கியது. சூறைக் காற்று, இடியுடன் பெய்த மழை இரவு 11மணிவரை விட்டுவிட்டு பெய்து கொட்டித் தீர்த்தது.  இதனால் செட்டிக்குளம் 43மிமீ, பாடாலூர் 17மிமீ, பெரம்பலூர் 97மிமீ, கிருஷ்ணாபுரம் 23மிமீ, தழுதாழை 27மிமீ, வி.களத்தூர் 2மிமீ, வேப்பந்தட்டை  110மிமீ என பெரம்பலூர் மாவட்ட அளவில் மொத்தம் 319மிமீ மழைபெய்தது. அகரம் சீகூர், லெப்பைக்குடிகாடு, புதுவேட்டக்குடி ஆகிய இடங்களில் மழை  அளவு பதிவாகவில்லை. மாவட்டத்தின் சராசரி மழையளவு 29மிமீ ஆகும்.இந்நிலையில் எதிர்பார்க்காத அளவுக்கு பெரம்பலூரில் கனமழை கொட்டித் தீர்த்ததால் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் பல இடங்களில் மேன்ஹோல்  வழியாக பொங்கி தெருக்களில் துர் நாற்றத்துடன் கழிவுநீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சற்று பள்ளமாக உள்ள 7வது வார்டு பாரதிநகரில்  10க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவுநீர் உள்ளே புகுந்தது. அரையடி உயரத்திற்கு மேல் கழிவுநீர் வீடுகளில் புகுந்ததால் நகராட்சி நிர்வாகத்திற்குத்  தகவல் தெரிவிக்கப் பட்டது.

இதனையடுத்து 10 மணிய ளவில் நகராட்சிஆணையர் குமரிமன்னன் நேரில் வந்து பாதாள சாக்கடைத் திட்டப் பணியாளர்களைக் கொண்டு பொக்லைன்  இயந்திரத்தின் உதவியுடன் கழிவுநீர் அனைத்தும் வாய்க்காலில் வழிந்தோட வழிசெய்து, சுத்தப்படுத்த நடவடிக்கை எடுத்தார். பின்னர் கழிவுநீர் புகுந்த  வீடுகளில் சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.இதேபோல் 12வது வார்டு சங்குப் பேட்டையில் மழை நீர் புகுந்ததால் கழிவுநீர் வாய்க்கால் ஓரமுள்ள 2 வீடு களில் புகுந்த தண்ணீரை நகராட்சி  ஊழியர்கள் அகற்றினர்.

ஜிஹெச்வார்டுகளில்புகுந்த மழைநீர்
பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனையின் வயதான பெண்கள் தங்கியுள்ள வார்டுகளில் மழைநீர் புகுந்து அரையடி உயத்திற்கு  நின்றதால், கட்டில்களில் படுத்திருந்த அனைவரும் கட்டிலைவிட்டு இறங்காமலும் தவித்தனர். இந்த காட்சி வீடியோ பதிவாக பேஸ்பீக், வாட்ஸ் அப்  போன்ற சமூக வலைத் தளங்களில் பரவியது. அதன்பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் மழைநீரை அகற்றித் தூய்மைப் படுத்தினர்.

Tags : Perambalur ,houses ,homes , Heavy rain ,Perambalur, People ,stench
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி