×

நீர்த்தாவரங்களால் பொலிவு இழப்பு காஷ்மீர் `தாலாக’ மாறுமா கொடைக்கானல் ஏரி?

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரி தற்போது களைச்செடிகள் மற்றும் நீர்த்தாவரங்கள் நிரம்பி பொலிவை இழந்து வருகிறது. நேற்று கொடைக்கானல்  நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஐம்பதுக்கு மேற்பட்டோர் படகுகள் மற்றும் உபகரணங்கள் மூலம் ஏரியின் கரை பகுதியிலும், ஏரிக்கு உட்பகுதியில்  உள்ள நீர்த்தாவரங்கள், கரையோரம் உள்ள களைச்செடிகளை அப்புறப்படுத்தும் பணியை இரண்டாவது நாளாக மேற்கொண்டனர்.இந்த பணியை கூடுதல் பணியாளர்களுடன் செய்தால் கொடைக்கானல் ஏரி ஓரளவிற்கு தனது அழகு கெடாமல் பாதுகாக்கப்படும் நிலை உருவாகும்.  இதில் கொடைக்கானல் நகராட்சி கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், ``கொடைக்கானல் ஏரியை அழகுபடுத்துவதில் புதிய வரைவு திட்டத்தை உருவாக்கி முறையாக  பணியை மேற்கொண்டால் ஏரி மேலும் அழகு பெற வாய்ப்புள்ளது. நகராட்சி கவனத்தில் கொண்டு இந்த பணியை செய்ய வேண்டும். காஷ்மீர் தால் ஏரியை தூய்மை செய்வதுபோல் கொடைக்கானல் ஏரியையும் நவீன  கருவிகளின் உதவியுடன் தூய்மை செய்ய வேண்டும்’’ என்றனர்.

Tags : Kashmir ,Kodaikanal Lake ,Tala ,Talaka , Kodaikanal ,Lake,'Talaka' ,Kashmir?
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!