×

அடுத்த மாதம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்...: பெற்றோர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வேணடுகோள்!

லண்டன்: அடுத்த மாதம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு பெற்றோரை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். மிக அபாயகரமான இந்த வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி உலக நாடுகள் எங்கும் வேகமாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் இதுவரை 3,25,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41,433 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு பெற்றோரை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், கொரோனா வைரஸால் பள்ளியில் ஏற்படும் ஆபத்து குறைவு. குழந்தையின் வளர்ச்சிக்கும் அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கும் இனியும் பள்ளியிலிருந்து விலகியிருப்பது மிகவும் தீங்கு விளைவிக்கும். நம் குழந்தைகளை மீண்டும் வகுப்பறைக்குள் அழைத்துச் செல்வதும், அவர்களுடைய நண்பர்களுடன் இருப்பதும் மிக முக்கியம். பள்ளிக்கு திரும்புவதைவிட வேறு எதுவும் நம் குழந்தைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திவிடாது, என்று தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.



Tags : Boris Johnson ,children ,school ,UK ,parents , England, Boris Johnson, School
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...