×

ஜனநாயகக் கட்சியின் பிடன் தனக்கு போட்டியாளரே அல்ல... அடுத்த 4 ஆண்டுகளுக்கும் நானே அமெரிக்க அதிபர் : டொனால்டு டிரம்ப் கர்ஜிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி நடக்கிறது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் ஜோ பிடனை அதிபர் வேட்பாளராக ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதேபோல கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  இந்த நிலையில், குடியரசு கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் அதிபர் வேட்பாளராகவும், துணை அதிபர் வேட்பாளராக மைக் பென்ஸ் பெயர்களை அக்கட்சியின் தலைவர் ரோஜோவ் மெக்டேனியல் அறிவித்தார்.

கொரோனா பரவல் காரணமாகத் தேசியக் குழு கூட்டம், பெரிய அளவில் நடத்தப்படவில்லை. எனினும், குழு அரங்கத்திற்கு வந்த டிரம்ப், நாம் இதுவரை யாருமே செய்திராத பணிகளை விரைவாக செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். நமது ஒற்றுமைதான் நமக்கான வெற்றியாகும். இந்த வைரஸ் நோய் பரவலையும், அதன் தாக்கத்தையும் நாம் மறக்க முடியாது. நமது சேவைகளை வேகப்படுத்துவோம் என்றார். மைக் பென்ஸ் பேசுகையில், அமெரிக்காவின் நலனுக்காக இன்னும் 4 ஆண்டுகளுக்கு அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட வேண்டும். அதை நாம் உறுதி செய்வோம் என்று குறிப்பிட்டார். தேர்தலையொட்டி டிரம்ப்பும், ஜோ பைடனும் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். பிடன் தனக்கான போட்டியாளரே அல்ல என்று டிரம்ப் கூறியுள்ளார். எனவே அடுத்த 4 ஆண்டுகளுக்கும் தாமே அதிபர் என்பது டிரம்ப்பின் நம்பிக்கை. இதேபோல டிரம்ப் மீது பிடனும் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Tags : President ,Biden ,rival ,Democrat ,Donald Trump ,United States , Democrats, Biden, US President, Donald Trump, Roar
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை