×

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பது உண்மைதான்!: ஜெர்மனி பரபரப்பு குற்றச்சாட்டு..!!

பெர்லின்: ரஷ்ய நாட்டு எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ஜெர்மனி தெரிவித்துள்ளது. ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. இவர் விளாடிமின் புதினை எதிர்த்து அதிபர் தேர்தலில் நிற்க முயன்று பின்னர் தடைவிதிக்கப்பட்டவராவார். தேர்தலுக்கு பிறகும் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த  நவால்னி, விமான பயணத்தின் போது திடீரென சுயநினைவு இழந்து கோமா நிலைக்கு சென்றார். தேநீரில் விஷம் கலந்து நவால்னியை கொல்ல ரஷ்ய அதிகாரிகள் சதித்திட்டம் தீட்டியதாக பரவலாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெர்கலும் தலையிட்டதால் நவால்னியை சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு அனுப்ப ரஷ்ய அரசு அனுமதி அளித்தது.

தற்போது ஜெர்மனியில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நவால்னியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும், சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்திருப்பதாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களுக்கு ரஷ்யாவில் பல முன்னுதாரணங்கள் உள்ளதாக மெர்கலின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீபன் தெரிவித்திருக்கிறார். இதனிடையே நவால்னி சிகிச்சை பெற்று வரும் ஜெர்மன் மருத்துவமனையில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags : Navalny ,Russian ,Germany , Russia, Leader of the Opposition, Navalny, Poison, Germany
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...