×

சரக்கு விமானமாக மாறிய A - 320 ரக பயணிகள் விமானம்!: ஸ்கூட் நிறுவனத்தின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு..!!

கோலாலம்பூர்: கொரோனா வைரஸ் பரவலால் பயணிகள் விமான சேவை முடங்கியுள்ள நிலையில் விமானங்களை முழு அளவில் சரக்கு விமானமாக மாற்றியமைத்து ஸ்கூட் டைகர் ஏர் நிறுவனம் பெருமளவில் பொருளீட்டி வருகிறது. சிறிய விமான நிலையங்களை கொண்ட நகரங்களுக்குள் சரக்குகளை எடுத்து செல்ல வசதியாக A - 320 ரக பயணிகள் விமானத்தின் இருக்கைகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் விமானத்தின் சரக்கு கொள்திறன் இரட்டிப்பானது. இதன் மூலம் விமானங்கள் சுமார் 20 டன் எடையுள்ள சரக்குகளை சுமந்து செல்ல முடியும். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பயணிகள் செல்லும் நூற்றுக்கணக்கான விமானங்களை சரக்கு விமானங்களாக ஸ்கூட் டைகர் ஏர் நிறுவனம் இயக்கி வருகிறது.

சிங்கப்பூரை மையமாக கொண்ட ஸ்கூட் நிறுவனம், மாற்றியமைக்கப்பட்ட சிறிய வகை பயணிகள் விமானங்கள் மூலம், ஆஸ்திரேலியாவின் பெர்த், சீனாவின் ஹாங்ஸோ, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 200க்கும் அதிகமான சரக்கு விமானங்களை இயக்கி சரக்குகளை கொண்டு சேர்த்து வருகிறது. தொடர்ந்து, பொருட்கள் பாதுகாப்பாக சென்றடைவதை உறுதி செய்ய விமானத்தில் இரண்டு விமானிகள் உள்ளிட்ட 4 பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர். A - 320 ரக பயணிகள் விமானத்தை சரக்கு விமானமாக மாற்றிய ஸ்கூட் நிறுவனத்தின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும், அந்நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று முழுக்கவும் சரக்கு விமானமாக மாற்றப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Welcome to Scoot , Freight, A-320 passengers, Scoot company, welcome
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது...