கடன் தொல்லையால் டெய்லர் தற்கொலை

குன்றத்தூர்: மாங்காடு அடுத்த சிக்கராயபுரம், தங்கம் அவென்யூவை சேர்ந்தவர் ராமானுஜம் (44). அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்தார். நேற்று காலை கடைக்கு சென்ற சென்ற ராமானுஜம், மதியம் சாப்பிட வீட்டுக்கு வரவில்லை. இதனால், அவரது குடும்பத்தினர், அங்கு, சென்றனர். அப்போது, மூடப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, ராமானுஜம் அங்குள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ராமானுஜம் ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் இருந்த அவருக்கு, கடன் தொல்லையும் அதிகமாக இருந்தது. கடனை அடைக்க முடியாமல் விரக்தியடைந்த அவர், நேற்று கடைக்கு செல்வதாக கூறி கடைக்குள் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

Related Stories:

More