அம்பத்தூர் எம்டிஎச் சாலையில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு

சென்னை: ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய ஷோரூம் அம்பத்தூர் எம்டிஎச் சாலை கிருஷ்ணாபுரம் ஸ்டெட்போர்டு மருத்துவமனை அருகில் அமைக்கப்பட்டுள்ளது. ஷட்டில் கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சங்கர் இதனை நேற்று திறந்து வைத்தார். பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமி தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் வகையில் ஆன்டி பாக்டீரியல் வேட்டிகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. மேலும், பல்வேறு ரகங்களில் வேட்டி, சட்டைகள், இளைஞர்களின் மனம் கவரும் வகையில் டி-சர்ட்டுகள், வெண்மையில் மட்டுமின்றி டிசைனுடன் கூடிய பனியன்கள், ஜட்டிகள், வேட்டி டிராயர்கள் உள்ளிட்டவை ராம்ராஜ் காட்டனில் கிடைக்கிறது. யூத் கலெக்‌ஷன், குழந்தைகளுக்கான வேட்டி சட்டைகள், பெண்களுக்கான லெக்கின்ஸ், சிம்மிஸ் மற்றும் அனைத்து விதமான உள்ளாடைகள் மற்றும் முகக்கவசங்களும் கிடைக்கும். உலகெங்கும் பரவியுள்ள தமிழருக்காக ramrajcotton.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் விற்பனையும் செய்யப்படுகிறது.

Related Stories:

>