×

‘ஜீவன ரக்‌ஷா பதக்’ விருது: முதல்வர் வழங்கினார்

சென்னை: நீரில் மூழ்கிய 6 பேரை காப்பாற்றியவருக்கு மத்திய அரசின் ‘ஜீவனரக்‌ஷா பதக்’ விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் உள்ள வெள்ளையன் ஏரியில் குளிக்க சென்ற 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஏரியின் ஆழமான பகுதியில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளனர். அப்போது, அவ்வழியாக சென்ற ஸ்ரீதர் 6 பேரையும் காப்பாற்றினார். இவ்வீர, தீர செயலுக்காக தமிழக அரசு 2019ம் ஆண்டுக்கான ‘ஜீவன ரக்‌ஷா பதக்’ என்ற விருதுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். எனவே, தமிழக முதல்வர், நேற்று ஸ்ரீதருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கவுரவித்தார். ஸ்ரீதர், 2019ம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது, தமிழக அரசின் வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chief Minister , Jeevan Raksha Pathak Award, Chief Minister
× RELATED தனிக்கட்சி தொடங்குகிறார் ஓ.பன்னீர்செல்வம்?