×

எரிவாயு குழாய் திட்டம் தடுக்க அதிகாரி காலில் விழுந்து விவசாயிகள் கதறல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசலில் விளைநிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை ஐ.ஓ.சி.எல். நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. எதிர்ப்பை மீறி நேற்று திடீரென ஐ.ஓ.சி.எல். அதிகாரிகள், தாசில்தார் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்போடு எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தக்கோரி போலீஸ் அதிகாரி காலில் விழுந்து விவசாயிகள் கதறினர். இருப்பினும் குழாய் பதிப்பதற்கான ஆயத்த பணி நடந்தது. இதனால் விவசாயிகள் அங்கேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : officer , Gas pipe project, officer, falling on foot, farmers roaring
× RELATED பழநி கோயில் செயல்அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி பொறுப்பேற்பு