×

கோமாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!: சகோதரி கிம் யோ ஜாங்-யிடம் ஆட்சி பொறுப்புகள் ஒப்படைப்பு..!!

பியோங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருப்பதால் அவரது சகோதரியான  கிம் யோ ஜாங்கியிடம் அதிபர் பொறுப்புகளை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தகவலை தென்கொரியாவின் மறைந்த முன்னாள் அதிபர் கிம் டே ஜங்கின் உதவியாளர் சாங் சாங்- மின் வெளியிட்டுள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து அதிபர் கிம் ஜாங்கின் தேசிய மற்றும் சர்வதேச பொறுப்புகள் அனைத்தும் இளைய சகோதரியான கிம் யோ-ஜாங்யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சாங் சாங்- மின்  குறிப்பிட்டுள்ளார். வடகொரியா அதிபர் கிம்முக்கு சமீபத்தில் மிக சிக்கலான இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்கு பிறகு கிம் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், பொது நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற காட்சிகள் வெளியாகின. ஆனால் வடகொரியா அரசு வெளியிட்ட அனைத்து படங்களும், காணொலிகளும் போலியானவை என்று தென்கொரிய புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனனர்.

தொடர்ந்து, கிம் ஜாங்கின் தற்போதைய நிலை மேலும் நீடித்தால் அது வடகொரியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என முன்னாள் தென் கொரிய ஜனாதிபதியின் ஆலோசகர் சாங் சோங் மின் வெளிப்படுத்தியுள்ளார். தமக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், கிம் ஜாங் உன் கோமா நிலையில் தான் இருக்கிறார், ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருக்கிறாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றார். மொத்தமாக ஆட்சிப்பொறுப்பை ஒப்படைக்கும் ஒரு தெளிவான திட்டத்தை இதுவரை வடகொரியா உருவாக்கவில்லை. ஆட்சியில் வெற்றிடம் தென்பட கூடாது என்பதாலையே, அவரது சகோதரி கிம் யோ ஜாங் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளார் என அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்னரே, கிம் ஜாங் தமது பொறுப்புகளில் சிலவற்றை சகோதரிக்கு பகிர்ந்து அளித்ததுடன், மன அழுத்தம் காரணமாகவே இந்த பொறுப்பு ஒப்படைப்பு நடந்ததாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.

Tags : Kim Jong Un ,Kim Yoo Jong ,North Korean , North Korean President, Kim Jong Un, coma ,Assignment of governance, responsibilities, sister Kim Jong Un
× RELATED போருக்கு தயாராகுங்கள்: ராணுவ தளத்தை பார்வையிட்ட வடகொரியா அதிபர் கிம் ஆணை