×

கைலாசாவில் உணவகம் தொடங்க நித்தியானந்தாவுக்கு கடிதம் எழுதிய ஹோட்டல் உரிமையாளர் மீது மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!

மதுரை: கைலாசாவில் உணவகம் தொடங்க நித்தியானந்தாவுக்கு கடிதம் எழுதிய ஹோட்டல் உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.  ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருவதாக கூறி வருகிறார். கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நித்தியானந்தா,  கைலாசா நாட்டில் மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலையை சேர்ந்தவர்களுக்கு வணிக செயல்பாடுகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். கைலாசா நாட்டில் ஹோட்டல் வைக்க அனுமதி கோரி, மதுரையை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஒருவர் நித்தியானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

இதுகுறித்து நேரலையில் தோன்றி பேசிய நித்தியானந்தா, கைலாசா நாட்டு பொருளாதார, வணிக செயல்பாடுகளில், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், உணவகம் தொடங்க நித்யானந்தாவிற்கு கடிதம் எழுதிய டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மதுரை ஆட்சியர் அலுவலகத்திலும், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில், இந்திய அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதோடு, நித்தியானந்தாவை நல்லவர் போல் காட்டும் முயற்சியில் டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார் ஈடுபடுவதாகவும், அரசால் தேடப்படும் குற்றவாளிக்கு ஆதரவு தருவதாக கூறி டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : hotel owner ,restaurant ,Madurai Collector , Kailasa, Restaurant, Nithiyananda, Hotel Owner, Madurai Collector's Office, Complaint
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...