×

ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: தக்க பதிலடி கொடுத்தது இந்திய ராணுவம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், இன்று மதியம் 1.30 மணியளவிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் இத்தகைய தாக்குதல்களுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. எனினும், பாகிஸ்தான் திருந்தியபாடில்லை.


இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பேனி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக ஆயுதங்கள்., மோர்ட்டார்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை. ஏற்கனவே கடந்த வாரமும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.


Tags : border ,Pakistan Army ,Indian Army ,Jammu , Pakistani Army,encroaches , Jammu border,Indian Army retaliates
× RELATED ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான்...