×

மதுரை அதிமுகவில் புதிய பரபரப்பு போர்க்கொடி தூக்கும் ஓபிஎஸ் டீம்: தொடர்ந்து புறக்கணிப்பு என குமுறல்

மதுரை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை நடந்து வருகிறது. அமைச்சர்கள் தெரிவித்த அதிரடி கருத்துகள், பரபரப்பு போஸ்டர்கள் ஆகியவை பிரச்னையை பெரிதாக்கின. மூத்த அமைச்சர்களின் முயற்சியால் பிரச்னை கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது. அதேசமயம், மதுரை மாவட்ட அதிமுகவில் தங்கள் தரப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குமுறுகின்றனர். மதுரை புறநகர் மாவட்டம் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது. மாநகர் மாவட்டத்தையும் சேர்ந்து மதுரை அதிமுகவில் கட்சிரீதியாக தற்போது மூன்று மாவட்டங்கள் உள்ளன. மாநகர் மாவட்டச்செயலாளராக அமைச்சர் செல்லூர் ராஜூ, புறநகர் மேற்கு மாவட்டச்செயலாளராக அமைச்சர் உதயகுமார், புறநகர் கிழக்கு மாவட்டச்செயலாளராக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா ஆகியோர் உள்ளனர். இவர்கள் மூன்று பேருமே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள்.

ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு மாவட்டச்செயலாளர் பதவி கொடுக்கப்படவில்லை. கடந்த 2019ல் நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு தங்களுக்கு சீட் ஒதுக்குமாறு கோரியது. ஆனால், அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதுதொடர்பாக, கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முறையிட்டனர். ‘பொறுமையாக இருங்கள், பார்த்துக்கொள்வோம்’ என அப்போது அவர் ஆறுதல் கூறினார்.தொடர்ந்து புறக்கணிப்பு தொடர்ந்த நிலையில், தற்போது முதல்வர் வேட்பாளர் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், அன்றிரவு மதுரையில் தங்கினார். தனது ஆதரவாளர்களாக உள்ள கட்சி நிர்வாகிகளை மட்டும் முதல்வர் சந்தித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இக்கூட்டத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அழைக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளரான, மதுரை அதிமுகவின் முக்கியப் புள்ளி ஒருவர் கூறுகையில், ‘‘அதிமுக கட்சி நிகழ்ச்சிகளில் எங்களை பேச அழைப்பது இல்லை. நோட்டீசில் பெயர்களை போடுவதில்லை. 4 ஆண்டுகளாக தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறோம். கட்சியைப் பொறுத்தவரை, ஒருங்கிணைப்பாளர்தான் முக்கிய பதவி. இதனை வகிக்கும் ஓபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர். முதல்வர் வேட்பாளர் பிரச்னையில் அனைவரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு ஆதரவை தெரிவித்துள்ளோம். இனிமேலும் எங்களை ஓரங்கட்டுவதை பொறுத்துக் கொள்ளமுடியாது. வரும் சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் 5 தொகுதியை எங்கள் ஆதரவாளர்களுக்கு ஒதுக்கவேண்டும் என கோரியுள்ளோம்’’ என்றார்.

Tags : OPS team , New agitation, flag hoisting, OPS team , Madurai AIADMK, Controversy continues
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...