×

கொரோனா கெடுபிடியிலும் பெங்களூர் குட்கா கோவைக்கு சப்ளை: தடுக்க முடியாமல் திணறும் அதிகாரிகள்

கோவை:  கோவை மாவட்டத்தில் பான்பராக், குட்கா, ஆர்.எம்.டி, ஹான்ஸ் போன்ற தடை ெசய்யப்பட்ட போதை பாக்கு, பான் மசாலா விற்பனை பரவலாக நடக்கிறது. மாவட்ட அளவில் ஆயிரக்கணக்கான கடைகளில் போதை பாக்கு தடையை மீறி விற்கப்படுகிறது. 1 லட்சத்திற்கும்  மேற்பட்டவர்கள் பான் மசாலா பொருட்களை தினமும் பயன்படுத்துவதாக தெரிகிறது. கோவை மாவட்டத்தில் பான் பொருட்களுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் தடையை மீறி அதிக விலைக்கு விற்பனை தொடர்கிறது. விற்பனை கடை, பதுக்கல் குடோன்களில் உணவு பாதுகாப்பு துறையினரும், போலீசாரும் சோதனை நடத்திய போது பல்வேறு தகவல் கிடைத்தது.

பெங்களூர், டெல்லியில் இருந்து தினமும் 7 முதல் 10 டன் போதை பாக்கு, பான் மசாலா பொருட்கள் நள்ளிரவ மற்றும் அதிகாலை நேரத்திற்கு கோவை வருவதாகவும், கண்டெய்னர் வாகனங்களில் பான் பொருட்கள், போதை பாக்குகள் கடத்தி வரப்படுவதாக தெரிய வந்துள்ளது. மாவட்ட அளவில் 200க்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகள் பான் பொருட்களை பதுக்கி விற்பனை செய்கின்றனர். கொரோனா நோய் கெடுபிடி நிலையிலும் ரகசியமாக பான் பொருட்கள் கடத்தி வரப்படுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  ‘‘ பெங்களூர், டெல்லியில் போதை பாக்கு தடை செய்யப்படவில்லை.

அங்கே உரிமம் பெற்ற குட்கா, பான்பராக் தொழிற்சாலைகள் அதிகளவு செயல்படுகிறது. அங்கேயிருந்து பார்சல் சர்வீசில் போதை பாக்குகளை அனுப்பி விடுகிறார்கள். எங்கே, எப்படி வருகிறது என கண்டுபிடிக்கமுடியவில்லை. கடுமையான சட்டம் இல்லாவிட்டால் பான்பராக், குட்கா விற்பனையை தடுக்க முடியாது. சிறு வியாபாரிகளுக்கு 500 ரூபாய் வரையில் அபராதம் விதிக்க முடியும், ’’ என மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.



Tags : Bangalore Gudka Coimbatore ,scandal ,Corona , Bangalore Gudka, Coimbatore, wake ,Corona scandal: Unstoppable, authorities
× RELATED பே-பிஎம் ஊழலில் புதிய தகவல்; 20 புதிய...