×

டெங்கு, ஸிகா, சிக்கன்குன்யா வைரசை கட்டுப்படுத்த கடிக்க வருது... 75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசு : அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அறிமுகம்

வாஷிங்டன்,-விவசாயத்தில் அதிக விளைச்சலைக் கொடுக்கக் கூடிய தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையை மேற்கொள்வார்கள். அதாவது, எந்தெந்த விலங்குகள் இணை சேர்ந்தால் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்பதைக் கவனித்து இணை சேர்ப்பர். அதன்படி, அதிக உற்பத்தியை தரக்கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், அவற்றின் மூலம் பெரும்பான்மையாகப் பாதிப்புகளே ஏற்படுகின்றன என்பதால், பல நாடுகளில் அவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந்த மரபணு மாற்ற அறிவியல், பக்க விளைவுகளை அதிகமாகக் கொண்டதென்று ஒரு சாரர் இதைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.  இப்போது இந்த மரபணு மாற்றத்தைக் கொசுக்களில் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் வந்துவிட்டால், டெங்கு, ஸிகா, சிக்கன்குன்யா போன்ற நோய்களும் கொசுக்கடியின் வழியாகவே ஏற்படுகின்றன. அதை சரிக்கட்ட அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை உற்பத்தி செய்ய உள்ளனர்.

கடந்த மே மாதம், அமெரிக்க சுற்றுச்சூழல் அமைப்பு பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு, அமெரிக்காவில் செயல்படுகின்ற ஆக்சிடெக் என்ற நிறுவனத்துக்கு மரபணு மாற்றம் செய்த கொசுக்களை உருவாக்க அனுமதி வழங்கியது. ஏடெஸ் எகிப்தி என்ற வகையைச் சேர்ந்த கொசுக்கள், மனிதர்கள் மத்தியில் டெங்கு, ஸிகா, சிக்கன்குன்யா போன்றவற்றைக் கொண்டுவருகின்றன. அந்த இனத்தின் ஆண் கொசுக்களிடமே இந்த மரபணு மாற்றப் பரிசோதனையை அவர்கள் மேற்கொண்டனர்.

‘OX5034’ என்று இந்த ஆண் கொசுவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. மரபணு மாற்றப்பட்ட ஆண் இனத்தோடு பெண் கொசுக்களுடைய இனப்பெருக்கச் செயல்முறை நிகழ்ந்தால், அதன் மூலம் பிறக்கின்றவை, முட்டையிலிருந்து வெளியாகிப் புழு வடிவத்தில் இருக்கையிலேயே இறந்துவிடும் என்றும் கூறுகின்றனர். அதன்மூலம், கொசுக்கள் பரப்புகின்ற நோய்கள் பரவாமல் தடுக்க முடியும் என்று ஆக்சிடெக் நிறுவனம் கூறுகின்றது.

மரபணு கொசுக்களை புளோரிடா கீஸ் என்ற ஒரு சிறிய தீவில் முதலில் திறந்துவிடப் போவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதற்குரிய மத்திய மற்றும் மாகாண அரசுகளின் ஒப்புதல்களும் கிடைத்துவிட்டன. மரபணு கொசு திட்டம் வெற்றியடைந்தால், இனிமேல் மக்கள் கொசுத் தொல்லையின்றி நிம்மதியாக இருக்க வாய்ப்புள்ளது. புளோரிடாவில் 75 கோடி மரபணுமாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை பறக்கவிட முடிவு செய்துள்ளனர்.இந்த கொசுக்கள் டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் கொசுக்களின் இனப்பெருக்கத்தை தடுத்து, அவற்றை முழுமையாக ஒழிக்கும் என அமெரிக்க அரசு நம்புகிறது. அத்துடன் இந்த விபரீத திட்டத்திற்கு அனுமதியும் அளித்துள்ளது. ஆனால் புளோரிடா மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



Tags : state ,Introduction ,Florida ,United States ,mosquitoes , Introduction to Dengue, Sika, Chickenpox, Genetic, Mosquito, USA, Florida
× RELATED உயர் ரத்த அழுத்த அபாயத்தில் இருந்த...