×

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் 6வது முறையாக பட்டம் வென்றது பேயர்ன் மியூனிச் அணி!: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்..!!

லிஸ்பன்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பேயர்ன் மியூனிச் அணி 6வது முறையாக பட்டம் வென்றுள்ளது. போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்ற இறுதி போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியை பேயர்ன் மியூனிச் அணி எதிர்கொண்டது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. உணவு இடைவெளிக்கு பிறகு ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 59வது நிமிடத்தில் பேயர்ன் மியூனிச் அணி வீரர் விங்கர் கிங்ஸ்லி கோமன் அடித்த கோலே அந்த அணிக்கு வெற்றிக்கான கோலாக அமைந்தது.

பதில் கோல் திருப்ப பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியின் முன்னணி வீரர்களான நெய்மர், மாப்பே ஆகியோர் கடுமையாக முயன்றும் பலன் கிடைக்கவில்லை. முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பேயர்ன் மியூனிச் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இதனை ஜெர்மனியில் உள்ள மியூனிச் நகரில் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். சாம்பியன்ஸ் லீக் கோப்பையை பேயர்ன் மியூனிச் அணி வெல்வது இது 6வது முறையாகும்.

அதே நேரத்தில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் கோப்பையை வென்ற அணி என்ற சரித்திர சாதனையையும் அந்த அணி படைத்துள்ளது. நெய்மர், மாப்பே ஆகியோரை கொண்டு மிகுந்த நம்பிக்கையுடன் முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறிய பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கோரோனா வைரஸ் காரணமாக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப் போட்டி பார்வையாளர்கள் அற்ற மூடிய விளையாட்டுத் திடலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags : Champions League ,Bayern Munich ,Fans , Champions League, Football, Degree, Won, Bayern Munich, Fans, Celebration
× RELATED செய்யும் தொழிலில் கவனம் செலுத்தி,...