×

சமர்ப்பண பூஜையின் போது நடிகை இடுப்பை பிடித்த முதல்வர்

*கர்நாடகாவில் பரபரப்பு

பெங்களூரு :   கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், ஸ்ரீ ரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கே.ஆர்.எஸ் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, இம்மாநில முதல்வர் எடியூரப்பா தலைமையில் சமர்ப்பண பூஜை நடந்தது. இதில், மண்டியா தொகுதி எம்.பியும், நடிகையுமான சுமலதா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில்  அணையில் மலர்கள் தூவப்பட்டது. முதல்வரை தொடர்ந்து சுமலதாவும் மலர் தூவ தொடங்கினார். முதலில் அவர் அணைக்கு அருகில் நிற்காமல் சற்று இடைவெளிவிட்டு நின்றார்.

அவரை அணையின் அருகே சென்று மலர் தூவும்படி, முதல்வர் எடியூரப்பா அவருடைய இடுப்பில் கையை வைத்து தள்ளினார். சில நொடிகள் அவருடைய கை இடுப்பில் இருந்த காட்சிகள், செய்தி சேகரிக்க சென்ற ஒருவரின் வீடியோவில் பதிவாகியுள்ளது. இது மீடியாக்களில் வெளியானதால் தற்போது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது குறித்து முதல்வர் தரப்பிலும், சுமலதா தரப்பிலும் எந்தவிதமான கருத்து மோதல்களும் ஏற்படவில்லை. எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் என்பதால் இந்த விவகாரம் குறித்து இதுவரை யாரும் பேச முன்வரவில்லை.


Tags : actress ,submission puja ,BS Yediyurappa ,mandya District , mandya ,karnataka,B.S. Yediyurappa
× RELATED கேன்ஸ் விழாவில் விருது பெற்ற முதல் இந்திய நடிகை அனசுயா சென்குப்தா..!