×

இந்தியாவில் வரும் டிசம்பருக்குள் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும்!: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உறுதி..!!


புதுடெல்லி, : கொரோனா வைரசிற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரஷ்யா ஏற்கனவே இந்த மருந்தை கண்டுபிடித்து விட்டதாக கூறி, உற்பத்தியையும் தொடங்கி விட்டது. இந்தியாவிலும், ‘கோவாக்சின்’ என்ற பெயரில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதை மனிதர்களிடம் செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 2 உள்நாட்டு தடுப்பூசிகள் உட்பட 3 தடுப்பூசிகள் பல்வேறு கட்ட சோதனைகளில் உள்ளன.இந்நிலையில், மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘அனைத்தும் சரியாக நடந்தால், இந்தியாவில் இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும்,’ என கூறியுள்ளார்.   

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா சமீபத்தில் கூறுகையில், ‘பாரத் பயோடெக்  - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இது மனிதர்களுக்கான பரிசோதனை அளவில் இருக்கிறது. இதேபோல், சைடஸ் கடில்லா லிமிடெட் நிறுவனமும் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த சோதனை இரண்டாவது கட்டத்துக்கு நகர்ந்துள்ளது,’ என்றார்.  இதேபோல், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை  இந்தியாவில் மனிதர்களிடம் 2 மற்றும் 3வது கட்டமாக பரிசோதனை செய்ய, சீரம் இன்ஸ்டியூட், ஆப் இண்டியா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



Tags : Harshavardhan ,India , India, December, Corona, Vaccine, Union Health Minister, Harshavardhan, Confirmed
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...