×

பீகாரில் தலையை சுற்ற வைக்கும் வினோதம் 66 வயது பெண் - 8 குவா குவா!

*மெகா ஊழல் குறித்து தீவிர விசாரணை


பாட்னா : 66 வயது பெண்ணுக்கு 13 மாதத்தில் 8 குழந்தைகள் பிறந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்புங்கள்.   பீகார் மாநிலத்தில் தேசிய கர்ப்பிணிகள் நல சுகாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு உதவியுடன் நடக்கும் இந்த திட்டம் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு மாத உதவி ₹1400 வழங்கப்படுகிறது. எல்லாமே வங்கி மூலம் ஒவ்வொருவர் கணக்கிலும் மாதந்தோறும்  சேர்க்கப்படும்.   சமீபத்தில் இது தொடர்பாக அதிரடி ஆய்வு உயர் அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதிர்ச்சி தரும் உண்மைகள் தெரியவந்தது.

குறிப்பாக முசாபர்பூர் மாவட்டத்தில் சில  கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட வயதான பெண்களுக்கு உதவித்தொகை  சென்றுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து கணக்குகளை ஆராய்ந்தபோது தான் அதிர்ச்சி காத்திருந்தது. குறிப்பாக 66 வயதான சாந்தி தேவி என்ற  மூதாட்டி, 13 மாதத்தில் 8 குழந்தைகளை அடுத்தடுத்து பெற்றதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த பெண்ணின் விவரங்களை சேகரித்தபோதே  அதிகாரிகளுக்கு தலை சுற்றியது. அவருக்கு கர்ப்பிணிகள் நல திட்ட உதவிகளையும் வங்கி கணக்கு மூலம் பெற்றுள்ளார். இதுபோன்ற, வயதான பல பெண்கள் குழந்தை பெற்றதாக கூறி, பணம் சுருட்டப்பட்டு இருந்தது.  

  முஷாஹரி கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த  இந்த பெண்களுக்கு, அந்த வட்டத்தை சேர்ந்த சுகாதார அதிகாரி சுசில் குமார்ஓய்வூதியம் பெற்றுத் தந்துள்ளார். அப்போது, அவர்களின்  வங்கி கணக்குகளை பயன்படுத்தி, இந்த முறைகேட்டை செய்துள்ளார். தலைமறைவான அவரை  போலீசார் தேடி வருகின்றனர்.

100 பெண்களிடம் மோசடி

சுகாதாரத்துறை அதிகாரி சுசில் குமார் பற்றி நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் அவர், 100க்கும் மேற்பட்ட வயதான பெண்களின் வங்கி கணக்கை சேகரித்து, ேமாசடி செய்தது உறுதியாகி இருக்கிறது. இந்த மோசடி, அரசு அதிகாரிகளின் துணையின்றி நடத்திருக்காது என்று போலீசார் கூறினர்.

Tags : babies ,Bihar , National Maternity Benefits Scheme, Bihar maternity scheme fraud
× RELATED பல்வேறு மாநிலங்களில் திருடி...