×

கும்பகோணம் அருகே காவல் நிலையத்தில் மாயமான 2 துப்பாக்கிகள் கண்டெடுப்பு

தஞ்சாவூர்:  கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் காவல் நிலையம் அருகே பறிமுதல் செய்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் 2 காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், காவல் நிலையத்தின் பின்புறத்திலிருந்து கிடைக்க பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழபுரம் பகுதியில் கள்ளத்துப்பாக்கிகள் உபயோகிப்பதாக காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர் 7 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் வழக்கானது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த வாரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் 2 துப்பாக்கிகள் மட்டும் காணாமல் போயுள்ளன.

இதனையடுத்து போலீசார் காவல் நிலையம் முழுவதும் துப்பாக்கியை தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவை கிடைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து செந்தில்குமார் என்ற காவலரை இதுதொடர்பாக பணிநீக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் காவல் நிலையத்திலிருந்து காணாமல் போன 2 துப்பாக்கிகளையும் காவல் நிலையத்தின் பின்புறத்திலிருந்து போலீசார் மீட்டுள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்திலேயே பொருள்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாதது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags : police station ,Kumbakonam. 2 ,Thirupananthal Police Station , Police Station, tanjore, kumbakonam,Thirupananthal , guns
× RELATED டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு போலீஸ் நிலையம் முற்றுகை