×

ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்டிய சமூக சேவகருக்கு கொரோனா பாதிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஆதரவற்றோரை அரவணைத்து உணவு வழங்குதல், உடை மாற்றி விடுதல் என பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்ட சமூக சேவகருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன்.  தமிழக காவல்துறையில் பணியாற்றிய அவர் கடந்த 2007 ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். மேலும் பிரசித்தி பெற்ற கோயில்களான ஏகாம்பரநாதர் கோயில், காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில்களும் மூடப்பட்டுள்ளன.   

இந்நிலையில் கோயில் வாசல்கள் மற்றும் பிற இடங்களில் இருந்த ஆதரவற்றோர்கள் உண்ண உணவின்றி தவித்து வந்தனர். அவர்களுக்கு தேவையின் அடிப்படையில் உணவு அளிப்பதுடன், உடைமாற்றி விடும் வேலையையும் ஓய்வுபெற்ற காவலர் சீனுவாசன் மனமுவந்து செய்து வந்தார். அது மட்டுமல்லாமல் துணைக்கு யாரும் இல்லாமல் ஆதரவற்றோர் சாலைகளில் திரிந்து வருகின்றனர். இவர்கள் இறந்துவிட்டால் தாமாக முன்வந்து அவர்களுக்கான இறுதிச்சடங்கு செய்யும் புண்ணிய காரியத்தையும்  செய்து வருகிறார். இந்நிலையில் இவரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : Corona , Unsupported, helpful, social worker, corona
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!