×

அமெரிக்கா, குவைத், சார்ஜாவில் இருந்து 711 இந்தியர்கள் மீட்பு

சென்னை: அமெரிக்கா, குவைத், சார்ஜா நாடுகளில் சிக்கித்தவித்த 711 இந்தியர்கள் மீட்கப்பட்டு 5 சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து 89 இந்தியர்கள், குவைத்திலிருந்து 3 சிறப்பு மீட்பு விமானங்களில் 441 இந்தியர்கள், சார்ஜாவிலிருந்து 181 இந்தியர்கள் மீட்கப்பட்டு நேற்றுமுன்தினம் இரவிலிருந்து நேற்று அதிகாலை வரை மொத்தம் 5 சிறப்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுக்கு குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடத்தப்பட்டன. அதன்பின்பு அனைவருக்கும் சென்னை விமான நிலையத்தில் அரசின் இலவச கொரோனா மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் அரசின் இலவச தங்குமிடங்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்த 391 பேர் மேலக்கோட்டையூரில் விஐடி கல்வி நிறுவனத்திற்கும், கட்டணம் செலுத்தி ஓட்டலில் தங்க விருப்பம் தெரிவித்த 309 பேர் சென்னை நகரில் உள்ள ஓட்டல்களுக்கும், அரசின் சிறப்பு அனுமதிபெற்ற 11 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தவும் அனுப்பப்பட்டனர்.

Tags : Indians ,US ,Kuwait ,Sharjah. 711 Indians ,Sharjah , USA, Kuwait, Sharjah, 711 Indians, Rescue
× RELATED மும்பை இந்தியன்ஸ் வெற்றி