×

சென்னையில் தினசரி ஆயிரத்தை கடப்பதால் கொரோனா தொற்று சதவீதம் 10 ஆக உயர்வு: 5 மண்டலங்களில் தொடர்ந்து அதிகரிப்பு

சென்னை: சென்னையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. 5 மண்டலங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. இதனால் வைரஸ் பாதிப்பு 7 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் சென்னையில் மீண்டும் கொரோனா வேகமெடுக்க தொடங்கியுள்ளது. சென்னையில் மொத்த கொரோனா பாசிட்டிவ் 1,24,071ஆக இருந்தது. அதில் 1,08,545 பேர் குணமடைந்தனர். 2564 பேர் இறந்தனர். சிகிச்சையில் 12,962 பேர் உள்ளனர்.

இதில் திருவெற்றியூர் மண்டலத்தில் 262 பேர், மணலி மண்டலத்தில் 143 பேர், மாதவரத்தில் 612 பேர், தண்டையார்பேட்டையில் 713 பேர், ராயபுரத்தில் 783 பேர், திரு.வி.க.நகரில் 885 பேர், அம்பத்தூரில் 1311 பேர், அண்ணா நகரில் 1480 பேர், தேனாம்பேட்டையில் 841 பேர், கேடம்பாக்கத்தில் 1544 பேர், வளசரவாக்கத்தில் 1190 பேர், ஆலந்தூரில் 557 பேர், அடையாறு மண்டலத்தில் 1399 பேர், பெருங்குடியில் 532 பேர், சோழிங்கநல்லூரில் 460 பேர், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 250 பேர் சிசிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் குறிப்பாக கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரை தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 900 ஆக இருந்தது. ஆனால் 14ம் தேதி முதல் திடீரென தினசரி  ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகி வருகிறது. குறிப்பாக அம்பத்தூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு உள்ளிட்ட மண்டலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. எனவே இந்த மண்டலங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மைக்ரோ குழுக்கள் மூலம் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : zones ,Chennai ,Corona , Chennai, Corona, rising by 10 per cent, in 5 zones, continuing to increase
× RELATED சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற...