×

கோயம்பேட்டில் பரபரப்பு 5 ஆம்னி பஸ்கள் தீயில் எரிந்து நாசம்: மர்ம நபர்கள் கைவரிசையா என போலீசார் விசாரணை

சென்னை: கோயம்பேடு ஆம்னி பஸ் நிறுத்தத்தில் அடுத்தடுத்து 5 பஸ்கள் தீப்பிடித்து எரிந்தன. இது மர்ம நபர்கள் கைவரிசையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்பேட்டில் ஆம்னி பஸ்களை நிறுத்தி வைப்பதற்கென்று தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக ஆம்னி பஸ்கள் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று மதியம் 1.30 மணி அளவில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ் ஒன்றில் இருந்து புகை வந்தது.

இதனைக் கண்ட அக்கம்பக்ககத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஜெ.ஜெ. நகர், அசோக் நகர், எழும்பூர், கோயம்பேடு ஆகிய நான்கு இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் தீ மளமளவென்று அடுத்தடுத்து நின்றிருந்த 5 பஸ்களுக்கு பரவியது. இதில் மூன்று ஆம்னி பஸ்கள் முற்றிலும் எரிந்து போயின. இரண்டு மணி நேர கடும் போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : persons ,Coimbatore ,Omni , Coimbatore, 5 Omni buses, destroyed by fire
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...