×

சோனியா காந்தி பதவி விலகியதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது: காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் விளக்கம்

டெல்லி: சோனியா காந்தி பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தையடுத்து ராகுல் காந்தி தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து  கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை   இடைக்கால தலைவராக சோனியா காந்தி  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பொறுப்பு ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை கூட உள்ள நிலையில், சோனியா காந்தி இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலக  முடிவு செய்திருப்பதாக  தகவல் வெளியானது.

காங்கிரசுக்கு முழு நேர தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், பூபேந்தர் சிங் ஹூடா, வீரப்ப மொய்லி, ராஜ்பாபர், மிலிந்த் தியோர், சந்தீப் தீக்ஷித், ரேணுகா சவுத்ரி, மணிஷ் திவாரி உள்ளிட்ட 23 பேர், இடைக்கால தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளிவந்த தகவலை அடுத்து, காங்., இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து சோனியா விலக முடிவு செய்ததாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை முற்றிலும் காங்கிரஸ் கட்சி முற்றிலும் மறுத்துள்ளது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், “ சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலகியதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது” என்றார்.


Tags : Sonia Gandhi ,party spokesperson ,Congress , Reports , Sonia Gandhi, completely , Congress party spokesperson's, explanation
× RELATED அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் யார்?.....