×

ரஷ்யாவில் நஞ்சு கொடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அலெக்சி நாவல்னி சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்டார்..!!

ஜெர்மனி: ரஷ்யாவில் நஞ்சு கொடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னி சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்டார். அலெக்சி நாவல்னி கடந்த 2 நாட்களாக சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்படும் நபராக மாறியிருக்கிறார். ரஷ்யாவில் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தவர் அலெக்சி நாவல்னி. வியாழன் அன்று சைபீரியாவில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் புறப்பட்ட நாவல்னிக்கு தீடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. விமானம் ஓம்ஸ் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாவல்னியின் உடல்நிலை மோசமடைந்து கோமா நிலைக்கு சென்றார். விமானம் ஏறுவதற்கு முன்பாக அவர் தேநீர் அருந்தியதாகவும் அதில் நஞ்சு கலக்கப்பட்டிருக்கலாம் எனவும் ஆதரவாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

 உடனடியாக அவரை ஜெர்மனியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஆதரவாளர்களும் அவரது மனைவியும் வலியுறுத்தினர். ஆனால் நாவல்னியின் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்காது என்று தொடக்கத்தில் மருத்துவர்கள் கூறினர். மேலும் அவரது உடலில் நஞ்சு இருப்பதற்கான சுவடு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் புதின் அரசு உண்மையை மறைப்பதற்காகவே நாவல்னி ஜெர்மனிக்கு செல்வதை தடுப்பதாக ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் அவர் ஜெர்மனிக்கு செல்ல மருத்துவர்கள் அனுமதி அளித்தனர். ஜெர்மனியை சேர்ந்த தன்னார்வல தொண்டு அமைப்பு அதற்கான விமானத்தை ஏற்பாடு செய்தது.

இதனையடுத்து விமானம் மூலமாக ஜெர்மனிக்கு நாவல்னி அழைத்து செல்லப்பட்டார். உடன் அவரது மனைவியும் சென்றுள்ளார். பேர்லனில் இருக்கும் மருத்துவமனையில் நாவல்னிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமான பயணத்தின் போது அவரது உடல்நிலை சீராக இருந்தது என அவரது மனைவி தெரிவித்துள்ளார். 2018ம் ஆண்டு இதேபோல புதினை விமர்சனம் செய்தும், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட வெர்சிலோ என்பவர்  ஜெர்மனிக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நஞ்சு அளிக்கப்பட்டதற்கான தடையங்கள், 3 நாட்களில் அழியும் நஞ்சை அவருக்கு அளிக்கப்பட்டதாகவும் அதே வகையான நெஞ்சே நாவல்னிக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் வெர்சிலோவின் மனைவி தெரிவித்துள்ளார்.

Tags : Russia ,Alexei Navalny ,Germany , Alexei Navalny, suspected of poisoning in Russia, was taken to Germany for treatment .. !!
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...