×

முழு ஊரடங்கில் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் அமைச்சரின் தரிசனத்தால் சர்ச்சை : புனித நீர் எடுக்க வந்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்

ஈரோடு:  பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்காக பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் மனை திறக்கப்பட்டு அவர் சரிசனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தென்னகத்தின் காசி என்றழைக்கக்கூடிய பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வந்துள்ளார். இதனையடுத்து, காவிரி, பவானி, அமுத நதி ஆகிய 3 நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் போலீசார் பாதுகாப்புடன் அவர் புனித நீராடினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிவகாசியை அடுத்த மூளிப்பட்டியில் உள்ள தங்களது குலதெய்வமான சிவன் கோவில் குடமுழக்கிற்காக புனித நீரை எடுக்க வந்துள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் 7ம் கட்ட ஊரடங்காக ஆகஸ்ட் மாதம் இறுதி வரை பொதுமுடக்கம் அமலில் உள்ளது. மேலும் ஒவ்வொரு ஞயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொது முடக்கம் காரணமாக  தமிழகத்தில் பெரிய கோவில்கள் ஏதும் திறக்கப்படவில்லை. அதாவது சிறிய கோவிகள் மற்றும் வழிபாட்டு தளங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மேலும் பெரிய கோவிகளில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் விதிகளை மீறி அமைச்சர் புனித நீராடி, கோவிலில் தரிசனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Rajendra Balaji ,curfew ,minister ,Bhavani Sangameshwarar , Controversy over minister's vision at Bhavani Sangameshwarar temple during full curfew: Minister Rajendra Balaji explains that he came to fetch holy water
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி