×

புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கோவிட் வரி மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு!: கொரோனா பாதிப்பு தொடர்வதால் வரி நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவிப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கோவிட் வரி இன்றுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மதுபானங்களுக்கு போடப்பட்ட கோவிட் வரி மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பதற்கு புதுச்சேரி அரசு கோப்பினை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பியது. துணைநிலை ஆளுநர் அந்த கோப்பிற்கு தற்போது அனுமதி கொடுத்துள்ளார். இந்த அனுமதியின்படி ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் என 3 மாதங்களுக்கு கோவிட் வரி நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே மூன்று மாதங்களாக கோவிட் வரியும், கலால் வரியும் இருப்பதினால் மதுபானத்தின் விற்பனை பெருமளவு குறைந்திருந்தது.

அதேபோல அரசுக்கான வருவாயும் குறைந்திருந்தது. ஆனால் கொரோனா நோயின் தொற்று தொடர்ந்து நீடிப்பதால் மதுபானங்களுக்கு இந்த வரி விதித்தே ஆக வேண்டும் என்று கலால் துறை சார்பில் அரசுக்கு ஆலோசனை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே அரசும் அதற்கான கோப்பினை ஆளுநருக்கு அனுப்பியது. இந்நிலையில் கோவிட் வரி விதிப்பிற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார். இதனால் புதுச்சேரியில் இன்னும் 3 மாதங்களுக்கு கோவிட் வரி விதிப்பு நீட்டிக்கப்படவுள்ளது. அதேவேளையில் இ - பாஸ் முறையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதால் புதுச்சேரியிலும் இ - பாஸ் முறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் புதுச்சேரியில் மதுபானங்களின் விலை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் வரி விதித்த 3 மாதங்களில் வெறும் 90 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Pondicherry ,Govt , Pondicherry, Liquor, Govt Tax, Extension, Corona
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...