×

தொடக்கமே ‘அதகளம்’… தபால் வாக்குகளில் திமுக லீடிங்.. சறுக்கும் அதிமுக வேட்பாளர்கள்

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகளில் திமுக கூட்டணி 84 இடங்களிலும், அதிமுக கூட்டணி 55 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.சேப்பாக்கம் தொகுதியில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தபால் வாக்குகளில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதேபோல் வேளச்சேரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். கொளத்தூர், வேளச்சேரி, திருச்சி மேற்கு, செங்கல்பட்டு, சேப்பாக்கம், திருச்சுழி, காட்பாடி, பாளையங்கோட்டை, அண்ணாநகர், ஆண்டிப்பட்டி, கும்பகோணம், ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், பவானிசாகர், கோபிச் செட்டிப்பாளையம், விருகம்பாக்கம், திருவண்ணாமலை, மதுரை மேற்கு, சைதாப்பேட்டை, திருச்செங்கோடு, அம்பத்தூர், திருவள்ளூர், திருத்தணி உள்பட தொகுதிகளில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.அதிமுக கூட்டணி எடப்பாடி, ஆரணி, திருச்சி கிழக்கு, போடி, தொண்டாமுத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட தொகுதிகளில் தபால் வாக்குகளில் முன்னிலை வகிக்கிறது. எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போடியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், குமாரபாளையத்தில் அமைச்சர் தங்கமணி, விழுப்பரத்தில் சிவி சண்முகம் ஆகியோர் தபால் வாக்குகளில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.*சைதாப்பேட்டை தொகுதியில் சைதை துரைசாமி (அதிமுக) பின்னடைவு- திமுகவின் மா.சுப்பிரமணியன் முன்னிலை*பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பின்னடைவு – திமுக வேட்பாளர் வரதராஜன் முன்னிலை*நாகை தொகுதியில் முதல் சுற்று முடிவில் விசிக வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ் முன்னிலை*மயிலாப்பூர் தொகுதியில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் த.வேலு முன்னிலை*அம்பத்தூர், மதுரவாயல் தொகுதிகளில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை*கோவை தெற்கில் கமல்ஹாசன் முன்னிலை.அம்பத்தூர், மதுரவாயல் தொகுதிகளில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை*திருவண்ணாமலை தொகுதியில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு முன்னிலை*நெல்லை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் லட்சுமணன் முன்னிலை*மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி ராஜா முன்னிலை*வேப்பனஹல்லி சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி முன்னிலை*ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் 2077 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை*தபால் வாக்கு எண்ணிக்கையில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் முன்னிலை*தபால் வாக்கு எண்ணிக்கையில் தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் முன்னிலை*தபால் வாக்கு எண்ணிக்கையில் வாசுதேவநல்லூர் தொகுதியில் மதிமுக வேட்பாளர் முன்னிலை*தபால் வாக்கு எண்ணிக்கையில் தி.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை*தபால் வாக்கு எண்ணிக்கையில் கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை…

The post தொடக்கமே ‘அதகளம்’… தபால் வாக்குகளில் திமுக லீடிங்.. சறுக்கும் அதிமுக வேட்பாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Adagalam ,Chennai ,Tamil Nadu Assembly ,Dhimuka Coalition ,Aimuga Coalition ,Athakalam ,Dinakaraan ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...