×

சினிமா படப்பிடிப்புகள், தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

டெல்லி: இந்தியாவில் சினிமா படப்பிடிப்புகள், தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது. அனைத்து துறைகளும் முடங்கி கிடக்கின்றன.இந்த வைரசின் தாக்கத்திற்கு சினிமா துறையும் தப்பவில்லை.திரையரங்குகள் பல மாநிலங்களில் மூடப்பட்டுள்ளதால், படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திரையரங்குகள் இதுவரை மூடப்படாத நிலையில், கொரோனாவிற்கு அஞ்சி படப்படிப்புகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்போது சினிமா படப்பிடிப்புகள், தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்புகளை நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஜவடேகர் வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்புகளை நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

* படப்பிடிப்புக்கு வருவோரின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்.

* எப்பொழுதும் ஒருவருக்கு ஒருவர் 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

* படப்பிடிப்புத் தளங்களில் அடிக்கடி கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும்.

* படப்பிடிப்பு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

* குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு படப்பிடிப்பை நடத்த அறிவுறுத்தல்.

* படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது.

* வெளிப்புற படப்பிடிப்பின்போது உள்ளூர் அதிகாரிகள் உதவியுடன் கூட்டத்தை கட்டுப்படுத்த அறிவுரை.

* ஒலிப்பதிவு கூடம், எடிட்டிங் அறை உள்ளிட்ட பணியிடங்களில் சமூக இடைவெளி அவசியம்.

* அழகுக் கலை மற்றும் சிகை அலங்கார நிபுணர்கள் பாதுகாப்பு உடைகளை அணிந்திருக்க வேண்டும்.

*  பலர் கையாளக் கூடிய கருவிகளை பயன்படுத்துவோர் கையுறை அணிந்திருக்க வேண்டும்.

* சட்டையில் பொருத்தும் மைக்குகளை தவிர்த்து, மைக்கின் ஒலிவாங்கும் பகுதியை தொடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தல்.


Tags : television shooting ,cinema shooting ,Central Government ,Government , Cinematography, Federal Government, Permission, Guidelines, Release
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...