×

படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் : சினிமா படப்பிடிப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

டெல்லி : திரைப்படங்கள், தொலைக்காட்சி படப்பிடிப்புகளை நடத்துவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். சில நெறிமுறைகள் பின்வருமாறு...

* படப்பிடிப்புக்கு வருவோரின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்.

*படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது.

*படப்பிடிப்பின் போது நடிகர், நடிகை தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.

*உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்கள் கையுறை கட்டாயம் அணிய வேண்டும்.

 *படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

*குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

*வெளிப்புற படப்பிடிப்பின் போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Tags : shooting site ,cinema shooting , Shooting, social break, cinema shooting, guiding ethics, release
× RELATED மலையாள சினிமா படப்பிடிப்புக்காக...