×

புதிய கல்வி கொள்கை தொடர்பாக நாளை முதல் ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு...!!!

டெல்லி : மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை முதல் 31ம் தேதி வரை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கை 2020 சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இருக்கும் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இந்தக் கல்விக் கொள்கையைப் பலர் வரவேற்றுள்ளனர். அதே சமயம் இதற்கு அதே அளவுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துகளை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் நாளை முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

மேலும், http//innovativeindia.mygov.in/nep2020 என்ற இணையதளத்தில் சென்று கருத்து கூறலாம் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி செயலாளர் அனிதா கார்வால் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

Tags : teachers ,Central Government ,Government ,Announcement , New Education Policy, Teachers, Opinion, Federal Government, Announcement
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...