திருவண்ணாமலையில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாருக்கு அடி உதை: போலீசார் விசாரணை..!!!

திருவண்ணாமலை: அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாரை பொதுமக்கள் அடித்து உதைத்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைதிக்காக உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் வருவது வழக்கமான ஒன்றாகும். ஒரு சிலர் அங்கேயே வீடு வாடகைக்கு எடுத்து சில மாதங்கள் தங்கிவிட்டு விட்டு தங்கள் நாட்டுக்கு செல்வார்கள். இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர் கிரிவலத்தில் உள்ள அருணாச்சலேஸ்வர நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார்.

வீட்டின் முதல் தளத்தில் தங்கி வந்துள்ள அவரை சாமியார் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து, ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். அமெரிக்க நாட்டு பெண்ணை பலாத்தகாரம் செய்ய முயற்சித்தார். தற்காப்புக்காக அந்த பெண், சாமியாரை கத்தியால் தாக்கிவிட்டு கூச்சலிட்டார். மேலும், தலையில் அடிபட்ட நிலையில் அந்த பெண் கூச்சலிட்டதை அடுத்து, பொதுமக்கள் கூடி, அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சாமியாரை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும், தலையில் காயமடைந்த அந்த பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, இந்த தகவல் அறிந்து திருவண்ணாலை தாலுகா காவல் நிலைய அதிகாரிகள், அந்த சாமியாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முதற்கட்ட விசாரணையில் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்ட அந்த சாமியார், கோவை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் கிரிவலம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: