×

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் 29 பேர் மீதான எஃப்.ஐ.ஆர். ரத்து!: மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரபரப்பு உத்தரவு..!!

மும்பை: டெல்லி மாநாட்டில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள மும்பை உயர்நீதிமன்றம், இந்தியாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு வெளிநாட்டினரை பலிகடா ஆக்க முயற்சி நடைபெறுவதாக விமர்சித்துள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாம்முதின் பகுதியில் கடந்த மார்ச் மாதம் இஸ்லாமியர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 8 ஆயிரம் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், கொரோனா உத்தரவை மீறியதாக கூறி வெளிநாட்டு இஸ்லாமியர்கள் 29 பேர் மீது மும்பை காவல்துறை பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், மும்பை காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, விசா நிபந்தனைகளை மீறி மதப் பிரச்சாரம் செய்தார்கள் என்பதற்கும், கோவிட் பரவலுக்கும் காரணமாக இருந்தார்கள் என்பதை நிரூபிக்கவும் எவ்வித ஆதரவும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நாட்டில் பரவி வரும் பெரும் தொற்றுக்கு வெளிநாட்டினரை காரணம் காட்டி அவர்களை பலிகடா ஆக்க முயற்சிப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவும் நீதிபதிகள் விமர்சனம் செய்துள்ளனர்.

Tags : foreigners ,conference Cancellation ,judges ,FIR ,Mumbai High Court ,Delhi ,Cancellation ,Islamists , Delhi, Foreign Islamists, FIR, Cancellation, Mumbai High Court, Judges
× RELATED தேர்தலில் வாக்களிப்பதை குடிமக்களின்...