×

யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் பைனலில் பிஎஸ்ஜி - பேயர்ன் மியூனிக் மோதல்

லிஸ்பன்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில்  பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) - பேயர்ன் மியூனிக் அணிகள் மோத உள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த தொடர், கொரோனாவால் 2020 மார்ச் மாதம் இடை நிறுத்தப்பட்டது. இம்மாத தொடக்கத்தில் மீண்டும் தொடங்கிய நிலையில், சாம்பியன்ஸ் லீக் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தொடரின் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை  போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் உள்ள  லஸ் அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் நடக்கிறது. இதில்  பிரான்சின்  லீக் 1 சாம்பியன்  பிஎஸ்ஜி,  ஜெர்மனியின் பண்டெஸ்லிகா சாம்பியன்  பேயர்ன் மியூனிக் மோதுகின்றன. பிஎஸ்ஜி முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது.

இறுதிப் போட்டியில் களமிறங்கும் மற்றொரு அணியான பேயர்ன் மியூனிக், யுஇஎப்ஏ சாம்பியன் பட்டத்தை 5 முறை வென்றுள்ளதுடன் 11வது முறையாக பைனலில் விளையாட உள்ளது.  இந்நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக நாளை அதிகாலை நடைபெறும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. ஆட்டத்தின் முடிவில் பேயர்ன் அணிக்கு 6வது பட்டமா, பிஎஸ்ஜிக்கு முதல் பட்டமா என்பது தெரிந்து விடும்.

*  பைனலில் மோதும் 2 அணிகளும் இத்தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை (பேயர்ன் தொடர்ந்து 10 வெற்றி, பிஎஸ்ஜி 9 வெற்றி, ஒரு டிரா).
*  இதற்கு முன்பு  8 முறை லீக் சுற்றில் மோதியதில் பிஎஸ்ஜி 5 முறையும், பேயர்ன் 3முறையும் வென்றுள்ளன.
*  ரியல் மாட்ரிட் 16 முறை பைனலில் விளையாடி 13 முறை கோப்பையை வென்று முன்னிலை வகிக்கிறது. ஏசி மிலன், பேயர்ன் தலா 11 முறை பைனலில் களமிறங்கியதில் முறையே 7 மற்றும் 5 வெற்றி பெற்றுள்ளன. லிவர்பூல் 9 பைனலில் 6 வெற்றி, பார்சிலோனா 8 பைனலில் 5 வெற்றி பெற்று அடுத்த இடங்களில் உள்ளன.Tags : final ,clash ,UEFA Champions League ,Bayern Munich ,PSG , UEFA Champions League, PSG, Bayern Munich
× RELATED மும்பை-பெங்களூரு இன்று மோதல்: பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது யார்?