×

சில்லி பாயின்ட்...

* கேல் ரத்னா விருது பெற்றுள்ள ரோகித் ஷர்மா, அர்ஜுனா விருதுக்கு தேர்வாகியுள்ள இஷாந்த் ஷர்மா, வீராங்கனை தீப்தி ஷர்மா ஆகியோருக்கு பிசிசிஐ வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ளது.
* கேப்டனாக டோனியின் செயல்பாடுகள், வியூகங்கள், நெருக்கடியான தருணங்களை அவர் கையாளும் விதம் ஆகியவை தலைமைப் பண்புக்கான இலக்கணத்தையே அடியோடு மாற்றிவிட்டன என்று முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் லஷ்மிபதி பாலாஜி கூறியுள்ளார்.
*  அர்ஜுனா விருது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம். இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சாதிக்கும் உத்வேகத்தை கொடுக்கும் என்று தடகள வீராங்கனை டூட்டீ சந்த் தெரிவித்துள்ளார்.
* ஐரோப்பிய லீக் கால்பந்து போட்டித் தொடரின் பைனலில் இன்டர் மிலன் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய செவில்லா அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
* கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னணி வீரர், வீராங்கனைகள் விலகி இருந்தாலும், யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தின் பெருமை எள்ளளவும் குறைந்துவிடாது என்று அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.



Tags : recipient ,Rohit Sharma , Kale Ratna Award, Rohit Sharma
× RELATED ஐபிஎல் தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’...