×

சுற்றி வளைத்து பிடித்தபோது இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி கைது

அண்ணாநகர்: சென்னை நகரில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதன்படி, அண்ணாநகர் காவல் எல்லையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அரும்பாக்கம், வள்ளுவர் நகரில் நேற்று முன்தினம் மாலை ஒரு பிரபல ரவுடி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அரும்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் சங்கர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரவுடியை சுற்றி வளைத்தனர்.

அப்போது அந்த ரவுடி கையில் வைத்திருந்த பட்டா கத்தியால் ஆய்வாளர் சங்கரை வெட்டிவிட்டு தப்ப முயன்றார். சக போலீசார் சாமர்த்தியமாக அந்த ரவுடியை மடக்கி பிடித்து, காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், அவர் அரும்பாக்கத்தை சேர்ந்த ரவுடி உமர் (எ) உமர் பாட்சா (24) என்பதும், ரவுடி ராதாகிருஷ்ணனின் கூட்டாளி என்பதும் தெரியவந்தது. இவர் மீது 4 கொலை உள்ளிட்ட 25 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Rowdy ,inspector , Inspector, cut with a scythe, arrested Rowdy
× RELATED மயிலாடுதுறையில் போலீசை அரிவாளால் வெட்டிய ரவுடி கைது