×

துணை ஒப்பந்த விவரங்கள் எங்கே? ரபேல் விமான முறைகேடு ராகுல் மீண்டும் தாக்குதல்

புதுடெல்லி: ரபேல் போர் விமானம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான ஆளும் பாஜ அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்கும் ரபேல் போர் விமானத்தின் கொள்முதலில் ஊழல், முறைகேடுகள் நடத்திருப்பதாக, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும், அதற்கும் முன்பும் மத்திய அரசை ராகுல் கடுமையாக விமர்சித்தார். ‘மோடியை திருடன்’ என்றும் அழைத்தார்.

தேர்தல் முடிந்த பிறகு, கடந்த ஓராண்டாக அவர் இப்பிரச்னையில் மவுனம் காத்தார். சமீபத்தில், பிரான்சில் இருந்து 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், ரபேல் போர் விமானம் கொள்முதல் பற்றி மீண்டும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `மத்திய தணிக்கை குழு அளித்த ஆய்வறிக்கையில் ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்த விவகாரத்தில், விமான பராமரிப்பு உள்ளிட்ட ராணுவ துணை ஒப்பந்தங்கள் குறித்து மத்திய அரசு எதுவும் குறிப்பிடவில்லை என்று கூறப்பட்டுள்ளது,’ என பத்திரிகைகளில் வெளியான செய்திகளை ஆதாரமாக இணைத்து கூறியுள்ளார்.

மேலும், மத்திய அரசின் கருவூலத்தில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது. உண்மை ஒன்றுதான். ஆனால், அதை அடைய பலவழிகள் உண்டு,’ என்ற காந்தியடிகளின் பொன்மொழியையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் பதிலடி
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு ரயில்வே அமைச்சரும் பாஜ மூத்த தலைவருமான பியூஷ் கோயல் அவருடைய டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘ராகுல் காந்திக்கு மிகவும் நெருங்கியவர்கள் சிலர், தனது தந்தையின் பாவத்தை கழுவவே, ராகுல் காந்தி ரபேல் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருவதாக கூறியுள்ளனர். இதனால் கட்சி சேதமடைகிறது. ஒருவர் தன்னை தானே அழித்து கொள்ள முடிவு செய்து விட்டால், யாரிடம் புகார் தெரிவிக்க முடியும். முடிந்தால், ரபேலை வைத்து வரும் 2024 பொதுத்தேர்தலை எதிர் கொள்ளட்டும்,’ என்று கூறியுள்ளார்.

Tags : Rafael ,attacks ,flight abuse ,Rahul , Subcontract, Raphael air abuse, Rahul, attack
× RELATED ரஃபேல் விமானம் முதல் தேர்தல்...