×

பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக பஞ்சாப்பில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

சண்டிகர்: பஞ்சாப்பில் இந்தியா, பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக, ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இந்தியா, பாகிஸ்தான் இடையே 3,300 கிமீ தூர எல்லை அமைந்துள்ளது. இதில், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் மட்டுமின்றி பஞ்சாப் மாநிலத்தை ஒட்டி 553 கிமீ தூரத்திற்கு சர்வதேச எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் தீவிரவாதிகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று சுட்டுக் கொன்ற அதிரடி சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து மூத்த அதிகாரிகள் கூறியதாவது:

பஞ்சாப்பின் தரண் தரண் மாவட்டத்தை ஒட்டிய சர்வதேச எல்லையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் மனிதர்கள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக 103வது பட்டாலியன் படைப்பிரிவினர் ஷார்படுத்தப்பட்டனர். இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடந்தது. அதிகாலை 4.45 மணி அளவில் பிகிவிந்த் பகுதியில் உள்ள தால் எல்லை முகாம் அருகே உயரமான புற்கள் வழியாக 5 பேர் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நடந்து செல்வது கண்டறியப்பட்டது.அப்பகுதி முழுவதும் உயரமான புற்கள் வளர்ந்திருப்பதால் ஊடுருவல்காரர்கள் இரவு நேரத்தில் மறைந்தபடி ஊடுருவியுள்ளனர். அவர்களை எல்லை பாதுகாப்பு படை சுற்றிவளைத்த போது, துப்பாக்கி சூடு நடத்தினர். பதில் தாக்குதலில் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு கூறினர். சர்வதேச எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

₹2,500 கோடி ஹெராயின்
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து 9.92 கிலோ ஹெராயின் போதை மருந்து, ஒரு ஏகே 47 துப்பாக்கி, 27 குண்டுகள், 9எம்எம் பெர்ரெட்டா பிஸ்டல்கள், 109 குண்டுகள், 2 மொபைல் போன், ₹610 பாகிஸ்தான் கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் 1 கிலோ ஹெராயின் மதிப்பு ₹7 கோடியாகும். அதன்படி, ₹70 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்புக்கு எல்லை வழியாக கடத்த முயன்ற 356 கிலோ ஹெராயின், 25 பயங்கர ஆயுதங்களை பாதுகாப்பு படைகள் பறிமுதல் செய்துள்ளன.

10 ஆண்டில் முதல் முறை
பாகிஸ்தானுடனான எல்லையில் ஊடுருவல் முயற்சிகள் அடிக்கடி நடந்தாலும், அதில் ஒன்று அல்லது 2 பேர் தான் ஈடுபடுவார்கள். கடந்த 10 ஆண்டுக்கும் மேல் தற்போதுதான் ஒரே சம்பவத்தில் 5 ஊடுருவல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Tags : militants ,Pakistan ,border ,Punjab , 5 militants,shot dead, tried,infiltrate Punjab , Pakistan
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி