நெல்லை அருகே குளத்தில் கிடந்தது வெடி வைத்த மாம்பழத்தை சாப்பிட்ட ஆடு தலை சிதறி பலி: வனத்துறையினர் விசாரணை

வீரவநல்லூர்: நெல்லை மாவட்டம் பத்தமடை மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்தவர்  மாரியப்பன்(36), ஆடு மேய்க்கும் தொழிலாளி. 50க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று பத்தமடை-குரங்குமடம் சாலையில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். இடைஞ்சான்குளத்தில் ஆடுகளை தண்ணீர் குடிக்க விட்டுள்ளார். அப்போது குளத்தில் பயங்கர வெடி சத்தம் கேட்டதுடன் ஒரு ஆடு தலை சிதறி பலியானது.  அதிர்ச்சியடைந்த மாரியப்பன், அங்கு சென்று பார்த்தபோது வெடி வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிட்டதும், ஆட்டின் வாயில் அது வெடித்து தலை சிதறி பலியானது தெரிய வந்தது. புகாரின்படி பத்தமடை போலீசார் சென்று பார்வையிட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். வனவிலங்குகளை வேட்டையாடும் எண்ணத்தில் மாம்பழத்தில் வெடி வைக்கப்பட்டதா என போலீசார் விசாரிக்கின்றனர். அண்மையில் கேரளாவில் கர்ப்பிணி யானை, வெடி வைத்த அன்னாசி பழம் சாப்பிட்டு வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>