சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: அமித்ஷா,வசந்தகுமார்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய பிரார்த்தனை

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள பாஜ அலுவலகத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. 18 கைகளைக் கொண்ட விநாயகர் சிலையை ரபேல் வாகனத்தில் கொண்டு செல்வதைப் போல வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல் பாஜ கொண்டு வந்த திட்டங்களை விநாயகர் வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கைகளிலும் ஒவ்வொரு திட்டத்தின் வரிகள் எழுதிய பேனர்கள்  கையில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பாஜ மாநில தலைவர் எல்.முருகன் உட்பட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக எளிமையாக அவர், அவர் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. மேலும் இந்த சிறப்பு பூஜையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் ஆகியோர் பூரணமாக குணமடைய வேண்டும். தொடர்ந்து இந்த நோயினால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்தோம். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜ உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்யப்பட்டது. நீட் தேர்வு நடத்த வேண்டிய சூழல் தற்போது உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>