×

படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க 50 வீட்டுக்கு ஒரு ஆசிரியர் நியமனம்

* வீடு வீடாக ஆய்வு செய்ய வேண்டும்
* மாநகராட்சி புது முயற்சி

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க படிப்பு பாதியில் நிறுத்தியவர்களை கண்டறியும் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 281 பள்ளிகளில் உள்ளது. இந்த பள்ளிகளில் தற்போது 80 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தலின் பெயரில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் ஆசியர்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டும் இணை ஆணையர் சங்கர்லால் குமாவத் உத்தரவிட்டுள்ளார். இதன்படி இந்த குழுவானது சென்னை பள்ளிகள் அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் படிப்பு இடையில் நிறுத்திய மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் விவரங்களை சேகரிக்க வீடு வீடாக ஆய்வு நடத்தப்பட்டுவருகிறது.
ஒரு ஆசியருக்கு 50 வீடுகள் என்று ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து ஆசியர்களும் தினசரி வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வின் போது ஆசிரியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை பயின்று இடைநிற்றல் மற்றும் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் விவரங்களை சேகரித்து உரிய படிவத்தில் பூர்த்தி செய்து நாள்தோறும் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த விவரங்களின் அடிப்படையில் இடைநிற்றல் மற்றும் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை சென்னை பள்ளிகளில் சேர்ப்பதற்கு தலைமையாசிரியர்களால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகஸ்ட் இறுதி வரை இந்த பணிகளை மேற்கொண்டு 100 சதவீதம் அனைவரும் பள்ளியில் சேருவதை உறுதிப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவில் இடம்பெற்றுள்ள சமுதாய ஒருங்கிணைப்பாளர்களை இணைத்து இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

Tags : households ,teacher ,school , Appointment , one teacher , 50 households , re-admit students, school
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர்...